caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 116

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:116

إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يُحْىِۦ وَيُمِيتُ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; இன்னும் மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு எந்த ஒரு பாதுகாவலரும் இல்லை; ஓர் உதவியாளரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! இன்னும் அவனே உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi116. வானங்கள், பூமியின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியதே! (அவனே) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை தவிர்த்து உங்களை பாதுகாப்பவர்களும் இல்லை; (உங்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70