caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 75

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:75

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنۢ بَعْدُ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ مَعَكُمْ فَأُو۟لَٰٓئِكَ مِنكُمْ وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِى كِتَٰبِ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இதற்கு) பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று, உங்களுடன் சேர்ந்து (உங்கள் எதிரிகளிடம்) போர் புரிந்தவர்கள் அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். அல்லாஹ்வின் வேதத்தில் இரத்த பந்தங்கள் அவர்களில் சிலர் சிலருக்கு நெருக்கமானவர் ஆவர். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் (இவர்களுக்கு) பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, உங்களுடன் சேர்ந்து (உங்கள் எதிரிகளிடம்) போர் புரிந்தார்களோ அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும், அல்லாஹ்வின் வேதத்தில் இரத்த பந்தங்கள் - அவர்களில் சிலர் சிலருக்கு - நெருக்கமானவர்கள் (-உரிமை உள்ளவர்வர்கள்) ஆவார்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. (இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர் புரிகிறார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70