وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُؤْمِنُونَ حَقًّا لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தவர்கள் இன்னும் (அவர்களை) அரவணைத்து உதவியவர்கள் இவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். இவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
Tamil Translation - Omar Sharifஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தார்களோ; இன்னும், (அவர்களை) அரவணைத்து உதவி செய்தார்களோ அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi74. எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.