caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 58

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:58

وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةً فَٱنۢبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَآءٍ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْخَآئِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஒப்பந்தம் செய்த) ஒரு சமுதாயத்திடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக (அந்த ஒப்பந்தத்தை) நீர் அவர்களிடம் எறிவீராக. நிச்சயமாக அல்லாஹ், மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (உம்முடன் உடன்படிக்கை செய்த) சமுதாயத்திடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக (அந்த ஒப்பந்தத்தை) நீர் அவர்களிடம் எறிந்து விடுவீராக. (அவர்களுடன் செய்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துவிடுவீராக!) நிச்சயமாக அல்லாஹ், மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. (உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70