لِيَمِيزَ ٱللَّهُ ٱلْخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِ وَيَجْعَلَ ٱلْخَبِيثَ بَعْضَهُۥ عَلَىٰ بَعْضٍ فَيَرْكُمَهُۥ جَمِيعًا فَيَجْعَلَهُۥ فِى جَهَنَّمَ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரிப்பதற்காகவும்; கெட்டவர்களை -அவர்களில் சிலரை சிலர் மீது ஆக்கி- அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றிணைத்து, நரகத்தில் அவர்களை ஆக்குவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). இவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Tamil Translation - Omar Sharifஇறுதியில், அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்துவிடுவான். இன்னும், கெட்டவர்களை (நரக படித்தரங்களில்) அவர்களில் சிலரை சிலர் மீது ஆக்கிவிடுவான். ஆக அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றிணைத்து, அவர்களை நரகத்தில் ஆக்கிவிடுவான். அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.