caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 38

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:38

قُل لِّلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَنتَهُوا۟ يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا۟ فَقَدْ مَضَتْ سُنَّتُ ٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பவர்களுக்கு கூறுவீராக: (இனியேனும் அவர்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொண்டால் முன் சென்றவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். (விஷமத்திற்கே அவர்கள்) திரும்பினால் முன்னோரின் வழிமுறை சென்று விட்டது. (அவர்களுக்கு நிகழ்ந்ததுதான் இவர்களுக்கும் நிகழும்.)
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு கூறுவீராக: “(இனியேனும் அவர்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொண்டால் முன்சென்றவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். இன்னும், (விஷமத்தின் பக்கம் அவர்கள்) மீண்டால் முன்னோரின் வழிமுறை சென்று விட்டது. (அவர்களுக்கு நிகழ்ந்த அதே தண்டனை இவர்களுக்கும் நிகழும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi38. (நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70