caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 36

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:36

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ لِيَصُدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ وَٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்கு செலவு செய்கின்றனர். அவர்கள் (மேலும் இவ்வாறே) அவற்றை செலவு செய்வார்கள். பிறகு அவை அவர்கள் மீது துக்க(த்திற்கு காரண)மாக ஆகும்! பிறகு (அவர்கள்) வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பாளர்கள் நரகத்தின் பக்கமே ஒன்று திரட்டப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்கு செலவு செய்கிறார்கள். அவர்கள் (மேலும் இவ்வாறே தொடர்ந்து) அவற்றை செலவு செய்வார்கள். பிறகு, அவை அவர்கள் மீது துக்க(த்திற்கு காரண)மாக மாறிவிடும்! பிறகு, (அவர்கள்) வெற்றி கொள்ளப்படுவார்கள். இன்னும், (இத்தகைய) நிராகரிப்பாளர்கள் நரகத்தின் பக்கமே ஒன்று திரட்டப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70