يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - அவர் உங்களை வாழவைக்கும் ஒன்றுக்கு உங்களை அழைத்தால் - பதிலளியுங்கள். “நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளத்திற்கும் நடுவில் தடையாகிறான். இன்னும் நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் - அவர் உங்களுக்கு (உயர்வான) வாழ்க்கையை தரக்கூடியதன் பக்கம் உங்களை அழைத்தால் - பதிலளியுங்கள் (உடனே கீழ்ப்படிந்து நடங்கள்!). இன்னும், “நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளத்திற்கும் நடுவில் தடையாகிறான். இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.