caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 12

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:12

إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போடுவேன். ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள்; அவர்களின் எல்லா கணுக்களையும் வெட்டுங்கள்” என்று (நபியே!) உம் இறைவன் வானவர்களுக்கு வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூருவீராக.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போடுவேன். ஆவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள்; அவர்களின் ஒவ்வொரு கணுவையும் (மூட்டுகளையும்) வெட்டுங்கள்” என்று (நபியே!) உம் இறைவன் வானவர்களுக்கு வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70