caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Jinn அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 40 · 72:27

إِلَّا مَنِ ٱرْتَضَىٰ مِن رَّسُولٍ فَإِنَّهُۥ يَسْلُكُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ رَصَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(எனினும்,) அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு மட்டும் தன் ஞானத்தில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் அவர்களுக்குப் பின்னும் பாதுகாவலர்களை அனுப்புவான்.
Tamil Translation - Omar Sharifஎனினும், அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. ஆக, (அவர்களுக்கு மட்டும் மறைவான விஷயங்களில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னாலிருந்தும் அவர்களுக்குப் பின்னாலிருந்தும் (கண்காணிக்கின்ற) பாதுகாவலர்களை அனுப்புவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. ஆயினும், தன் தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு அதை அவன் அறிவிக்கக் கூடும். (அதை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பிவைக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70