قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لَنُخْرِجَنَّكَ يَٰشُعَيْبُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَكَ مِن قَرْيَتِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَٰرِهِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய சமுதாயத்தில் பெருமையடித்(து புறக்கணித்)த தலைவர்கள், “ஷுஐபே! உம்மையும் உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் (அனைவரும்) எங்கள் கொள்கைக்கு நிச்சயம் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள். “நாங்கள் வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவருடைய சமுதாயத்தில் பெருமையடித்(து நம்பிக்கையை புறக்கணித்)த முக்கிய பிரமுகர்கள், “ஷுஐபே! உம்மையும் உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது, நீங்கள் (அனைவரும்) எங்கள் கொள்கைக்கு நிச்சயம் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள். “நாங்கள் (அந்த கொள்கையை தவறு என்று தெரிந்து அதை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi88. (ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார்.