caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 86

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:86

وَلَا تَقْعُدُوا۟ بِكُلِّ صِرَٰطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِهِۦ وَتَبْغُونَهَا عِوَجًا وَٱذْكُرُوٓا۟ إِذْ كُنتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ وَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் எல்லாப் பாதையிலும் அச்சுறுத்தியவர்களாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும் இன்னும் அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!”
Tamil Translation - Omar Sharif“இன்னும், நீங்கள் எல்லாப் பாதையிலும் (மக்களை) அச்சுறுத்தியவர்களாகவும்; அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும்; இன்னும், அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். இன்னும், நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi86. ‘‘நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!'' (என்றும் கூறினார்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70