caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:46

وَبَيْنَهُمَا حِجَابٌ وَعَلَى ٱلْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّۢا بِسِيمَىٰهُمْ وَنَادَوْا۟ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيْكُمْ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். (சொர்க்கத்தின் உயர்ந்த சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பர். (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை “ஈடேற்றம் உங்கள் மீது உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள்: (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்கள் (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். இன்னும், (சொர்க்கத்தின் உயரமான சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தை வைத்து அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை நோக்கி “உங்கள் மீது ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள். (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்களோ (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. (நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70