فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ ٱلضَّلَٰلَةُ إِنَّهُمُ ٱتَّخَذُوا۟ ٱلشَّيَٰطِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு பிரிவை அவன் நேர்வழிப்படுத்தினான். (வேறு) ஒரு பிரிவு, அதன் மீது வழிகேடு உறுதியாகிவிட்டது. (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தோழர்களாக எடுத்துக் கொண்டு, நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என எண்ணுகின்றனர்.
Tamil Translation - Omar Sharif(உங்களில்) ஒரு பிரிவை அவன் நேர்வழி நடத்தினான். (வேறு) ஒரு பிரிவு, அதன் மீது வழிகேடு உறுதியாகிவிட்டது. (ஏனெனில்,) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே (தங்கள்) தோழர்களாக (பாதுகாவலர்களாக, உதவியாளர்களாக) எடுத்துக் கொண்டனர். இன்னும், “நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றவர்கள்” என எண்ணுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (உங்களில்) சிலரை அவன் நேரான வழியில் செலுத்தினான். மற்றோர் மீது வழிகேடே விதிக்கப்பட்டது. அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே தங்கள் தோழர்களாக எடுத்துக் கொண்டதுடன் தாங்கள் நிச்சயமாக நேரான வழியில் இருப்பதாகவும் எண்ணிக் கொண்டனர்.