caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:20

فَوَسْوَسَ لَهُمَا ٱلشَّيْطَٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وُۥرِىَ عَنْهُمَا مِن سَوْءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ ٱلْخَٰلِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்விருவருக்கும் மறைக்கப்பட்ட அவ்விருவரின் வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் ஊசலாட்டத்தை உண்டாக்கினான். “நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் அல்லது (சொர்க்கத்தில்) நிரந்தரமானவர்களில் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (மற்ற எதற்காகவும்) உங்களிருவரையும் இம்மரத்தை விட்டு உங்களிருவரின் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் இருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் வெட்கத்தலங்களை அவர்கள் இருவருக்கும் வெளிப்படுத்தி காட்டுவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் (மனதில்) ஊசலாட்டத்தை உண்டாக்கினான். “நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் அல்லது (சொர்க்கத்தில்) நிரந்தரமாக இருப்பவர்களில் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர இம்மரத்தை விட்டு உங்களிருவரின் இறைவன் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70