وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கொடிய வேதனையால் அவர்களுக்கு சிரமம் தருபவர்களை அவர்கள் மீது மறுமை நாள் வரை நிச்சயமாக அவன் அனுப்புவான் என்று உம் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும் நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனே, பெரும் கருணையாளனே.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இன்னும் கொடிய தண்டனையால் அவர்களை துன்புறுத்துபவர்களை அவர்கள் மீது மறுமை நாள் வரை நிச்சயமாக அவன் அனுப்புவான் என்று உம் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக. நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். இன்னும், நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi167. (நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.