caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 138

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:138

وَجَٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتَوْا۟ عَلَىٰ قَوْمٍ يَعْكُفُونَ عَلَىٰٓ أَصْنَامٍ لَّهُمْ قَالُوا۟ يَٰمُوسَى ٱجْعَل لَّنَآ إِلَٰهًا كَمَا لَهُمْ ءَالِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇஸ்ரவேலர்களை கடலைக் கடக்கவைத்தோம். தங்கள் சிலைகளுக்கருகில் (வழிபாட்டுக்காக) தங்கியிருந்த ஒரு சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு வணங்கப்படும் கடவுள்கள் (சிலைகள்) இருப்பது போல் எங்களுக்கும் வணங்கப்படும் ஒரு கடவுளை (சிலையை) ஏற்படுத்து” என்று கூறினர். “நிச்சயமாக நீங்கள் அறியாத சமுதாயம்” என்று மூஸா கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இஸ்ரவேலர்களை கடலைக் கடக்க வைத்தோம். ஆக, தங்கள் சிலைகளுக்கருகில் (அவற்றை வழிபடுவதற்காக) தங்கியிருந்த ஒரு சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) வந்தனர். (அதை பார்த்துவிட்டு) கூறினார்கள்: “மூஸாவே! வணங்கப்படும் கடவுள்(சிலை)கள் அவர்களுக்கு இருப்பது போல் வணங்கப்படும் ஒரு கடவுளை (-ஒரு சிலையை) எங்களுக்கும் ஏற்படுத்து!” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தை) அறியாத மக்கள் ஆவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi138. நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70