caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 135

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:135

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ ٱلرِّجْزَ إِلَىٰٓ أَجَلٍ هُم بَٰلِغُوهُ إِذَا هُمْ يَنكُثُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு தவணை(க்குப் பின் ஒரு தவணை) வரை நாம் அவர்களை விட்டு வேதனையை நீக்கி, அதை (அத்தவணையின் இறுதியை) அவர்கள் அடையும் போது அவர்கள் (வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஆக, ஒரு தவணை(க்குப் பின் மறு தவணை) வரை நாம் அவர்களை விட்டு தண்டனையை நீக்கி, அதை (-அத்தவணையின் இறுதியை) அவர்கள் அடையும்போது அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விடுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi135. நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபோதெல்லாம் (அவர்கள் தங்கள் வாக்குறுதிக்கு மாறுசெய்துகொண்டே வந்தார்கள்.) இவ்வாறு அவர்களுக்கு ஏற்பட்ட (இறுதி) தவணையை அவர்கள் அடையும்வரை (தொடர்ந்து) மாறு செய்தே வந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70