caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 134

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:134

وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ ٱلرِّجْزُ قَالُوا۟ يَٰمُوسَى ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ لَئِن كَشَفْتَ عَنَّا ٱلرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது வேதனை நிகழ்ந்தபோது, “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு- எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு வேதனையை நீர் நீக்கினால் நிச்சயம் உம்மை நம்பிக்கை கொள்வோம்; உம்முடன் இஸ்ரவேலர்களை நிச்சயம் அனுப்புவோம்” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் மீது தண்டனை நிகழ்ந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்த பிரகாரம் (அதை நிறைவேற்றக் கோரி) - எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு தண்டனையை நீர் நீக்கினால் உம்மை நிச்சயம் நம்பிக்கை கொள்வோம்; இன்னும், இஸ்ரவேலர்களை உம்முடன் நிச்சயம் அனுப்புவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi134. அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70