caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 129

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:129

قَالُوٓا۟ أُوذِينَا مِن قَبْلِ أَن تَأْتِيَنَا وَمِنۢ بَعْدِ مَا جِئْتَنَا قَالَ عَسَىٰ رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى ٱلْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் துன்புறுத்தப்பட்டோம்; நீர் எங்களிடம் வந்த பின்னரும் (துன்புறுத்தப்படுகிறோம்) என்று (இஸ்ரவேலர்கள்) கூறினர். “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, (அவர்களின்) பூமியில் உங்களை அதிபதிகளாக்கக் கூடும். நீங்கள் எவ்வாறு (செயல்கள்) செய்கிறீர்கள் (நடந்து கொள்கிறீர்கள்) என அவன் கவனிப்பான்” என்று (மூஸா) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் துன்புறுத்தப்பட்டோம்; இன்னும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்படுகிறோம்.” அதற்கு (மூஸா) கூறினார்: “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, (அவர்களின்) பூமியில் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கக்கூடும். ஆக, நீங்கள் எவ்வாறு (செயல்கள்) செய்கிறீர்கள் (-நடந்து கொள்கிறீர்கள்) என அவன் கவனிப்பான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi129. (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகிறோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) ‘‘உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்கள் நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70