تِلْكَ ٱلْقُرَىٰ نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنۢبَآئِهَا وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ مِن قَبْلُ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அந்த ஊர்கள் அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (ஓதி) விவரிக்கிறோம். அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். எனினும், முன்னர் அவர்கள் பொய்ப்பித்து விட்டதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அந்த ஊர்கள், - அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (எடுத்துக் கூறி) விவரிக்கிறோம். இன்னும், அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்தனர். எனினும், முன்னர் அவர்கள் எதை பொய்ப்பித்து விட்டார்களோ அதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. (நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகிறோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கிவிட்டால் (பின்னர் அதை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்.