caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 100

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:100

أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِ أَهْلِهَآ أَن لَّوْ نَشَآءُ أَصَبْنَٰهُم بِذُنُوبِهِمْ وَنَطْبَعُ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமிக்கு அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையைக் கொண்டு) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமிக்கு, அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையினால் உடனே) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi100. பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70