يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகெண்டைக்காலை விட்டும் அகற்றப்படுகின்ற நாளில் (-கடுமையான சோதனை நிகழ்கின்ற நாளில் அவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifகெண்டைக்கால் காண்பிக்கப்படுகிற நாளில் (தங்கள் கூட்டாளிகளை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிவதற்கு அழைக்கப்படுவார்கள். ஆக, அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.