تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلْغَيْظِ كُلَّمَآ أُلْقِىَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (-நரகம் நிராகரிப்பாளர்களின் மீதுள்ள) கோபத்தால் தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த நரகமான)து (நிராகரிப்பாளர்கள் மீதுள்ள) கோபத்தால் (தனித் தனியாக பிரிந்து) தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் (பாவிகளின்) ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. அது கோபத்தால் வெடித்து விடுவதைப்போல் குமுறிக் கொண்டிருக்கும். அதில் ஒரு கூட்டத்தினர் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி (‘‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா'' என்று கேட்பார்கள்.