هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ وَإِلَيْهِ ٱلنُّشُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் பயன்படுத்துவதற்கு) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவனுடைய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் உங்களை) எழுப்பப்படுதல் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் வசிப்பதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும்) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவன் வழங்கிய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் நீங்கள்) எழுப்பப்படுவது இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi15. அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.