وَمَرْيَمَ ٱبْنَتَ عِمْرَٰنَ ٱلَّتِىٓ أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتْ مِنَ ٱلْقَٰنِتِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கின்றான்). அவள் தனது மறைவிடத்தை பேணிக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நமது (-நாம் படைத்த) உயிரிலிருந்து ஊதினோம். அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும் அவள் மிகவும் பணிந்தவர்களில் (ஒருத்தியாக) இருந்தாள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான்). அவள் தனது மறைவிடத்தை பேணி பாதுகாத்துக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நாம் படைத்த உயிரிலிருந்து ஊதினோம். இன்னும், அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும், அவள் மிகவும் பணிந்தவர்களில் உள்ளவளாக இருந்தாள்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள்.