ضَرَبَ ٱللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا۟ ٱمْرَأَتَ نُوحٍ وَٱمْرَأَتَ لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَٰلِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ ٱللَّهِ شَيْـًٔا وَقِيلَ ٱدْخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் நிராகரித்தவர்களுக்கு ஓர் உதாரணமாக அல்லாஹ் விவரிக்கின்றான். அவர்கள் இருவரும் நமது அடியார்களில் இரு நல்ல அடியார்களுக்கு கீழ் இருந்தனர். அவ்விருவரும் அவ்விருவருக்கும் (-இரு நபிமார்களுக்கும் மார்க்கத்தில்) மோசடி செய்தனர். ஆகவே, அவ்விருவரும் அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையில் இருந்து) எதையும் தடுக்க (முடிய)வில்லை. (அவ்விருவருக்கும்) கூறப்பட்டது: (நரகத்தில்) நுழைபவர்களுடன் நீங்கள் இருவரும் நரகத்தில் நுழையுங்கள்.
Tamil Translation - Omar Sharifநூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் நிராகரித்தவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் விவரிக்கிறான். அவர்கள் இருவரும் நமது அடியார்களில் இரு நல்ல அடியார்களுக்கு கீழ் இருந்தனர். அவ்விருவரும் அவ்விருவருக்கும் (-இரு நபிமார்களுக்கும் மார்க்கத்தில்) துரோகம் செய்தனர். ஆகவே, அவ்விருவரும் அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையில் இருந்து) எதையும் தடுக்க (முடிய)வில்லை. இன்னும், (அவ்விரு பெண்களுக்கும்) கூறப்பட்டது: “(நரகத்தில்) நுழைபவர்களுடன் நீங்கள் இருவரும் நரகத்தில் நுழையுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi10. நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்கள் இருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) ‘‘நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுந்து விடுங்கள்'' என்றே கூறப்பட்டது.