وَأَنفِقُوا۟ مِن مَّا رَزَقْنَٰكُم مِّن قَبْلِ أَن يَأْتِىَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَآ أَخَّرْتَنِىٓ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். ஆக, (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (-என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.”
Tamil Translation - Abdulhamid Baqawi10. உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான்.