caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Munaafiqoon அத்தியாயம், வசனம் 9

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 104 · 63:9

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُلْهِكُمْ أَمْوَٰلُكُمْ وَلَآ أَوْلَٰدُكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْخَٰسِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (மறக்கச் செய்து, உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். யார் அப்படி செய்துவிடுவார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பி (உலகக் காரியங்களில் ஈடுபடுத்தி) விடவேண்டாம். ஆக, அத்தகையவர்கள்தான் நஷ்டவாளிகள்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70