فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் (இரண) அருளைத் தேடுங்கள்! நீங்கள் வெற்றி அடைவதற்காக நீங்கள் அல்லாஹ்வை அதிகம் (புகழ்ந்தும் அவனுக்கு அதிகம் நன்றி செலுத்தியும்) நினைவு கூருங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi10. (ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.