وَإِذَا رَأَوْا۟ تِجَٰرَةً أَوْ لَهْوًا ٱنفَضُّوٓا۟ إِلَيْهَا وَتَرَكُوكَ قَآئِمًا قُلْ مَا عِندَ ٱللَّهِ خَيْرٌ مِّنَ ٱللَّهْوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِ وَٱللَّهُ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றனர்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுவார்கள். (நபியே!) கூறுவீராக! அல்லாஹ்விடம் உள்ளதுதான் வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (முஸ்லிம்களில் சிலர் இருக்கிறார்கள்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுகிறார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்விடம் உள்ளதுதான் (உலகத்தின்) வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi11. (நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (பிரசங்கம் நிகழ்த்துகின்ற) உம்மை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், மேலும், உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ்தான் மிக மேலானவன்.''