caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 96

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:96

فَالِقُ ٱلْإِصْبَاحِ وَجَعَلَ ٱلَّيْلَ سَكَنًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ حُسْبَانًا ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவனே) ஒளியை பிளப்பவன்; இரவை அமைதி பெறுவதற்காகவும் சூரியனையும் சந்திரனையும் (நேரம் மற்றும் மாதத்தின்) கணக்கிற்காகவும் ஆக்கினான். இவை மிகைத்தவன், நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்.
Tamil Translation - Omar Sharif(அவனே இருளிலிருந்து) ஒளியை பிளப்பவன்; இன்னும், இரவை அமைதி பெறுவதற்காகவும் சூரியனையும் சந்திரனையும் (நேரம் மற்றும் மாதத்தின்) கணக்கிற்காகவும் ஆக்கினான். இவை மிகைத்தவன், நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi96. அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70