إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلْحَبِّ وَٱلنَّوَىٰ يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَمُخْرِجُ ٱلْمَيِّتِ مِنَ ٱلْحَىِّ ذَٰلِكُمُ ٱللَّهُ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் வித்துகளையும், கொட்டைகளையும் பிளப்பவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறான்; உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறான்; அவன்தான் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ் வித்துகளையும், (பழங்களின்) கொட்டைகளையும் பிளந்து (செடி கொடிகளை) துளிர்க்கச் செய்பவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறான். அத்தகையவன்தான் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு வேறு) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi95. வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்?