أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ فَإِن يَكْفُرْ بِهَا هَٰٓؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوا۟ بِهَا بِكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்குத்தான் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்தால் அவற்றை நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு சமுதாயத்தை அவற்றுக்கு பொறுப்பாக்கி விடுவோம்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்தால் அவற்றை நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு சமுதாயத்தை (நாம் கொண்டுவருவோம். அவர்களை) அவற்றுக்கு பொறுப்பாளர்களாக ஆக்கி விடுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi89. இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்.