وَلَوْ جَعَلْنَٰهُ مَلَكًا لَّجَعَلْنَٰهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِم مَّا يَلْبِسُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(தூதருக்கு துணையாக அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக ஆக்கினாலும், அவரை(யும்) ஒரு ஆடவராகத்தான் ஆக்குவோம்; (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில் இவர்களால் பார்க்க முடியாது. அப்போது) அவர்கள் எதை (தங்கள் மீது) குழப்புகிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், (தூதருக்கு துணையாக வானத்திலிருந்து அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக நாம் ஆக்கினாலும், (அவரை பூமிக்கு அனுப்பும்போது) அவரை(யும்) (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவராகத்தான் ஆக்குவோம். (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில், இவர்களால் பார்க்க முடியாது.) இன்னும், அவர்கள் (தங்கள் மீது) எதை குழப்பிக் கொள்கிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (-மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.)
Tamil Translation - Abdulhamid Baqawi9. (அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் (அதே) சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி விடுவோம்.