caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:8

وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ مَلَكٌ وَلَوْ أَنزَلْنَا مَلَكًا لَّقُضِىَ ٱلْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா? என்றும் கூறினர். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டுவிடும். பிறகு, அவகாசம் அளிக்கப்படமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என்று அவர்கள் கூறினார்கள். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டு விடும். பிறகு, அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படாது.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70