caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 78

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:78

فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّى هَٰذَآ أَكْبَرُ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉதயமாகிய சூரியனைக் கண்டபோது, "இது என் இறைவன், இது மிகப் பெரியது” எனக் கூறினார். அது மறைந்தபோது, "என் சமுதாயமே! நீங்கள் (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, உதயமாகிய சூரியனைக் கண்டபோது, “இது என் இறைவன், இது மிகப் பெரியது’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “என் சமுதாயமே! நீங்கள் (உண்மையான இறைவனாகிய அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்’’ என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi78. பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70