فَلَمَّا رَءَا ٱلْقَمَرَ بَازِغًا قَالَ هَٰذَا رَبِّى فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِى رَبِّى لَأَكُونَنَّ مِنَ ٱلْقَوْمِ ٱلضَّآلِّينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉதயமாகிய சந்திரனைக் கண்டபோது, "இது என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்தபோது "என் இறைவன் என்னை நேர்வழிபடுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்” எனக் கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, உதயமாகிய சந்திரனை அவர் கண்டபோது, “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது “என்(னைப் படைத்த எனது உண்மையான) இறைவன் என்னை நேர்வழி படுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்’’ எனக் கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi77. பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்.