caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:40

قُلْ أَرَءَيْتَكُمْ إِنْ أَتَىٰكُمْ عَذَابُ ٱللَّهِ أَوْ أَتَتْكُمُ ٱلسَّاعَةُ أَغَيْرَ ٱللَّهِ تَدْعُونَ إِن كُنتُمْ صَٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது உங்களுக்கு (விசாரணைக்) காலம் வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு (நீங்கள் மரணிப்பதற்கு முன்னர்) அல்லாஹ்வின் தண்டனை வந்தால் அல்லது உங்களுக்கு மறுமை வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறுகின்ற) நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவற்றையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70