وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا صُمٌّ وَبُكْمٌ فِى ٱلظُّلُمَٰتِ مَن يَشَإِ ٱللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள் இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவரை வழிகெடுக்கிறான்; தான் நாடியவரை நேரான பாதையில் ஆக்குகிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள், - இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடியவர்களை நேரான பாதையில் நடத்துகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi39. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.