وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ وَلَا طَٰٓئِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّآ أُمَمٌ أَمْثَالُكُم مَّا فَرَّطْنَا فِى ٱلْكِتَٰبِ مِن شَىْءٍ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியில் ஊருவதும்; தன் இரு இறக்கைகளால் பறப்பதும் உங்களைப் போன்ற படைப்புகளே தவிர வேறில்லை. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifபூமியில் ஊர்ந்து செல்லக் கூடியதும்; தன் இரு இறக்கைகளால் (வானத்தில்) பறப்பதும் இல்லை, உங்களைப் போன்ற படைப்புகளாகவே தவிர. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு, தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்று திரட்டப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.