caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 37

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:37

وَقَالُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ قُلْ إِنَّ ٱللَّهَ قَادِرٌ عَلَىٰٓ أَن يُنَزِّلَ ءَايَةً وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்க நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif“(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?’’ என்று (இணைவைப்பாளர்கள்) கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்குவதற்கு நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன்தான். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. (‘‘நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கிவைக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதை) அறிந்து கொள்வதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70