قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: வானங்கள், பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ் அல்லாதவரையா பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேன்? அவன்தான் உணவளிக்கிறான்; அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை. (மேலும்) கூறுவீராக: (அல்லாஹ்வுக்கு முற்றிலும்) பணிந்தவர்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன். (நபியே) இணைவைப்பவர்களில் நிச்சயம் நீர் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “வானங்கள்; இன்னும், பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ் அல்லாதவனையா நான் (எனது) பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேன்? அவன்தான் உணவளிக்கிறான்; அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை.” (மேலும்) கூறுவீராக: “(அல்லாஹ்விற்கு முற்றிலும்) பணிந்தவர்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன். இன்னும், (நபியே) இணைவைப்பவர்களில் நிச்சயம் நீர் ஆகிவிடாதீர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi14. (நபியே!) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.''