بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَجَعَلَ ٱلظُّلُمَٰتِ وَٱلنُّورَ ثُمَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ يَعْدِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுகழ் (எல்லாம்) வானங்களையும், பூமியையும் படைத்த, இருள்களையும், ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய் தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.
Tamil Translation - Omar Sharifபுகழ் (எல்லாம்) வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய; இன்னும், இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்விற்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை வணக்க வழிபாட்டில்) சமமாக்குகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும், இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.