caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:2

هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن طِينٍ ثُمَّ قَضَىٰٓ أَجَلًا وَأَجَلٌ مُّسَمًّى عِندَهُۥ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ஒரு தவணையை விதித்தான். அவனிடம் குறிப்பிட்ட (வேறு) ஒரு தவணையும் உண்டு. (இதற்குப்) பிறகு(ம்), நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (உங்கள் மரணத்திற்கு) ஒரு தவணையை விதித்தான். இன்னும், அவனிடம் (மறுமை நிகழ்வதற்கு வேறு ஒரு) குறிப்பிட்ட தவணையும் உண்டு. (இதற்குப்) பிறகு(ம்), நீங்கள் (அல்லாஹ் உங்களை மறுமையில் எழுப்புவான் என்பதில்) சந்தேகிக்கிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70