caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 6

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:6

وَمَآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنْهُمْ فَمَآ أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ وَلَٰكِنَّ ٱللَّهَ يُسَلِّطُ رُسُلَهُۥ عَلَىٰ مَن يَشَآءُ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் தனது தூதருக்கு அவர்களிடமிருந்து (அவர்களின் செல்வங்களில்) எதை (சண்டையின்றி) உரிமையாக்கிக் கொடுத்தானோ அவற்றை அடைவதற்காக நீங்கள் (உங்கள்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டவில்லை. (உங்கள் முயற்சியால் தூதருக்கு கிடைக்கவில்லை.) என்றாலும், அல்லாஹ் தனது தூதர்களை தான் நாடுகின்றவர்கள் மீது சாட்டுகின்றான். (ஆகவே, அவர்கள் சண்டையின்றியே பணிந்துவிடுவார்கள்.) அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் தனது தூதருக்கு அவர்களிடமிருந்து (அவர்களின் செல்வங்களில்) எதை (சண்டையின்றி) உரிமையாக்கிக் கொடுத்தானோ அவற்றை அடைவதற்காக நீங்கள் (உங்கள்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டவில்லை. (உங்கள் முயற்சியால் தூதருக்கு இந்த செல்வம் கிடைக்கவில்லை.) என்றாலும், அல்லாஹ் தனது தூதர்களை, தான் நாடுகிறவர்கள் மீது சாட்டுகிறான். (ஆகவே, அந்த எதிரிகள் சண்டையின்றியே பணிந்துவிடுவார்கள்.) அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அவர்களிடமிருந்து, அல்லாஹ் தன் தூதருக்கு (சிரமம் ஏதுமின்றி)க் கொடுத்த பொருள்களுக்காக (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் குதிரையின் மீதேறியோ, ஒட்டகத்தின் மீதேறியோ (போர் புரிந்து) சிரமப்படவில்லை. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன் தூதர்களுக்கு ஆதிக்கத்தைக் கொடுப்பான். அல்லாஹ் சகலவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70