مَا قَطَعْتُم مِّن لِّينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَآئِمَةً عَلَىٰٓ أُصُولِهَا فَبِإِذْنِ ٱللَّهِ وَلِيُخْزِىَ ٱلْفَٰسِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் பேரித்த மரங்களை வெட்டினாலும் அல்லது அவற்றின் வேர்களில் நிற்பவையாக அவற்றை நீங்கள் விட்டாலும் (அவை இரண்டும்) அல்லாஹ்வின் உத்தரவின்படிதான் நடந்தன. இன்னும் பாவிகளை இழிவுபடுத்துவதற்காக நடந்தன.
Tamil Translation - Omar Sharifநீங்கள் பேரீச்ச மரங்களை வெட்டினாலும்; அல்லது, அவற்றின் வேர்களில் நிற்பவையாக அவற்றை நீங்கள் விட்டுவிட்டாலும் (அவை இரண்டும்) அல்லாஹ்வின் உத்தரவின்படிதான் நடந்தன. இன்னும், (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிய மறுக்கிற) பாவிகளை இழிவுபடுத்துவதற்காக நடந்தன.
Tamil Translation - Abdulhamid Baqawi5. நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவற்றை விட்டுவைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியம் ஆகும்).