caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 13

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:13

لَأَنتُمْ أَشَدُّ رَهْبَةً فِى صُدُورِهِم مِّنَ ٱللَّهِ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(முஃமின்களே!) நீங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அல்லாஹ்வை விட கடுமையான பயத்திற்குரியவர்கள். (-அவர்கள் அல்லாஹ்வை பயப்படுவதை விட உங்களை அதிகம் பயப்படுகின்றனர்.) அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் வல்லமையை) புரியாத மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharif(முஃமின்களே!) நீங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அல்லாஹ்வை விட கடுமையான பயத்திற்குரியவர்கள். (-அவர்கள் அல்லாஹ்வை பயப்படுவதை விட உங்களை அதிகம் பயப்படுகிறார்கள்.) அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் வல்லமையை) புரியாத மக்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கிறது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70