caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 12

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:12

لَئِنْ أُخْرِجُوا۟ لَا يَخْرُجُونَ مَعَهُمْ وَلَئِن قُوتِلُوا۟ لَا يَنصُرُونَهُمْ وَلَئِن نَّصَرُوهُمْ لَيُوَلُّنَّ ٱلْأَدْبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (நிராகரித்த வேதக்காரர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்கள் போர் செய்யப்பட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். (அப்படியே) இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள். பிறகு, (ஒருக்காலும்) இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். (நிராகரித்தவர்களுக்கு உதவிய இந்த நயவஞ்சகர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.)
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (-நிராகரித்த வேதக்காரர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். இன்னும், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். (அப்படியே) இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் இவர்களும் கண்டிப்பாக புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பிறகு, (ஒருக்காலும்) இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். (நிராகரித்தவர்களுக்கு உதவிய இந்த நயவஞ்சகர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi12. ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70