وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا۟ بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَٰقَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு தூதரோ உங்களை அழைக்கின்றார். திட்டமாக அவன் உங்கள் வாக்குறுதியை (நீங்கள் உங்கள் தந்தையின் முதுகில் இருந்த போது) வாங்கி இருக்கின்றான். நீங்கள் நம்பிக்கையாளராக இருந்தால்... (இது நம்பிக்கை கொள்வதற்கு சரியான தருணமாகும்).
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு இந்த தூதர் உங்களை அழைக்கிறார். திட்டமாக அவன் (உங்களிடம்) உங்கள் சத்திய வாக்கை வாங்கி இருக்கிறான். நீங்கள் (ஒரு நாள்) நம்பிக்கையாளராக ஆக நாடினால் (இதுதான் சரியான நேரம், இப்போதே நம்பிக்கை கொள்ளுங்கள். மரணம் எப்போது வரும் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi8. (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கைகொள்வதில்லை? உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கைகொள்ளுமாறு, உங்களை (நமது) தூதர் அழைக்கிறார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கிறான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.)